விவசாயத்துறை அமைச்சகம்

அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இடையே தில்லி விஞ்ஞான் பவனில் 8வது கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ம் தேதி நடக்கிறது

Posted On: 08 JAN 2021 7:25PM by PIB Chennai

மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சாம் பிரகாஷ் ஆகியோர் 41 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் , தில்லி விஞ்ஞான் பவனில் இன்று 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து ஒவ்வொன்றாக விவாதிக்கலாம் என விவசாயிகள் சங்கங்களிடம் அவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகளின் நலனை மனதில் வைத்துதான் வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். விவசாயிகளை பற்றி கவலைப்படும் அரசு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. ஆனால் எந்த தீர்வும் ஏற்படாததால், பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.

வேளாண் சங்கங்கள் போராட்டத்தை ஒழுங்குடன் நடத்துவது, பாராட்டுக்குரியது என வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். நியாயமான வழியில் தீர்வு காண முடியும் என்ற சாத்தியங்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தால், திறந்த மனதுடன், பேச்சுவார்த்தையை தொடர அரசு விரும்புவதாகவும் அவர் கூறினார்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் கேட்டுக் கொண்டன. திருத்தங்கள் செய்யலாம் என அரசு மீண்டும் கூறியது. நீண்ட ஆலோசனை நடந்தும், எந்த தீர்வும் ஏற்படவில்லை. அதனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை 2021 ஜனவரி 15ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

**********************



(Release ID: 1687207) Visitor Counter : 216