எரிசக்தி அமைச்சகம்

அதிக செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு திறன் அளவை பதிவு செய்தது சிங்ராலியில் உள்ள என்டிபிசி அனல் மின் நிலையம்

Posted On: 08 JAN 2021 2:42PM by PIB Chennai

என்டிபிசி நிறுவனத்தின் முதல் மின் நிலையம், உத்தரப் பிரதேசம் சிங்ராலியில் 38 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மின் நிலையம் கடந்த 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு திறனில்(பிஎல்எப்) 100.24 சதவீதத்தை பதிவு செய்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம்( சிஇஏ) வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 200 மெகாவாட் மின் நிலையம் 1982ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் வலுவான பிஎல்எப் பதிவு, அதன் சிறப்பான செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு திறனை காட்டுகிறது.

முதலாவது மின்நிலையத்தின் சாதனையை தவிர, என்டிபிசி நிறுவனத்தின் இதர 3 மின் நிலையங்களான, சிங்ராலியின் 4வது மின் நிலையம் மற்றும் கொர்பா முதல் மின் நிலையம், சட்டீஸ்கரில் உள்ள 2வது மின் நிலையம் ஆகியவை சிறப்பாக செயல்பட்ட முதல் 5 அனல் மின் நிலையங்களின் பட்டியலில்  இடம் பெற்றுள்ளன.

என்டிபிசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை படி, மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி குழுமம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அதிக அளவாக 222.4 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இது கடந்தாண்டு உற்பத்தியை விட 3.8 சதவீதம் அதிகம். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687059

**********************



(Release ID: 1687196) Visitor Counter : 142