தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மத்திய அரசின் டிஜிட்டல் நாள் காட்டி மற்றும் டைரியை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 08 JAN 2021 4:59PM by PIB Chennai

மத்திய அரசின் டிஜிட்டல் நாள் காட்டி மற்றும் டைரியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். தேசிய ஊடக மையத்தில் நடந்த விழாவில், நாள்காட்டியின் மற்றும் டைரியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கைப்பேசி செயலி ஆகியவற்றை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், முன்பு சுவர்களை அலங்கரித்த அரசு நாள்காட்டிகள் தற்போது செல்போன்களை அலங்கரிக்கின்றன என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய திரு பிரகாஷ் ஜவடேகர், ‘‘ இந்த கைபேசி செயலி இலவசம்.  2021 ஜனவரி 15ம் தேதி முதல், இது 11 மொழிகளில் இலவசமாக கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும், புதிய நாள்காட்டி தேவை என்ற நிலையை, இந்த செயலி மாற்றும். ஒவ்வொரு மாதத்திலும், ஒரு கருப் பொருள், ஒரு தகவல், பிரபல இந்திய தலைவர் பற்றிய விவரம் இந்த செயலியில் இருக்கும். இதுவரை கொண்டுவரப்பட்ட அரசு திட்டங்கள் தொடங்கப்பட்ட தேதியையும் இந்த செயலி தெரிவிக்கும்’’ என்றார். 

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குக்கு ஏற்ற வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் நாள்காட்டியை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர்ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்  ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கள விளம்பர மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் வடிமைத்து உருவாக்கியுள்ளது.  தற்போது இந்த செயலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. விரைவில் 11 இந்திய மொழிகளில் கிடைக்கும்.

இந்த செயலியை ஆண்ட்ராய்ட் போன்களில், கூகுள் ப்ளே ஸ்டோர் இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

https://play.google.com/store/apps/details?id=in.gov.calendar

ஐ-போன்களில், இந்த செயலியை கீழ்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

https://apps.apple.com/in/app/goi-calendar/id1546365594

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687106

**********************


(Release ID: 1687193) Visitor Counter : 296