மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்திய மொழிகளில், களப் பெயரை இலவசமாக வழங்கிறது இந்திய தேசிய இணையதள இணைப்பகம்

Posted On: 08 JAN 2021 2:03PM by PIB Chennai

இணையதள பதிவாளர்களுக்கு, 22 இந்திய அங்கீகார மொழிகளில் சர்வதேச களப் பெயரை (Internationalized Domain Name) இலவசமாக வழங்கவிருப்பதாக இந்திய தேசிய இணையதள இணைப்பகம்(நிக்சி) அறிவித்துள்ளது.  விண்ணப்பதாரர்களுக்கு இலவச மின்னஞ்சலும் உள்ளூர் மொழியில் வழங்கப்படும். பாரத் என்ற பெயரை களப் பெயராக சேர்ப்பதை ஊக்குவிக்கவும், உள்ளூர் மொழிகளில் தகவல்களைப் பரப்பவும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை பதிவு செய்யும் புதிய .இன் (.in) இணையதள பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.  ஏற்கனவே .இன்  இணையதளத்தை பதிவு செய்து 2021 ஜனவரி மாதத்தில் புதுப்பிக்க இருப்பவர்களும் இந்தச் சலுகையைப் பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687055

**********************(Release ID: 1687154) Visitor Counter : 237