பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள மேற்கு பாகிஸ்தான் அகதிகள் குழு, மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்குடன் சந்திப்பு

Posted On: 07 JAN 2021 5:47PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் உள்ள மேற்கு பாகிஸ்தான் அகதிகள்  செயற் குழு மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கை இன்று சந்தித்து பேசியது.

அப்போது, அந்த குழுவின் தலைவர் லப்பா ராம் காந்தி,  மத்திய அமைச்சரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.  அதில், கூறியிருப்பதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக, எங்கள் தலைமுறையினருக்கு,  தேசிய அடையாளம், ஜாதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் மறுக்கப்பட்டன. அப்போதைய ஜம்மு காஷ்மீர் அரசு, எங்களை வேற்று கிரகத்தினர் போல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு  சட்டம் ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம், மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு அனைத்து உரிமைகளும் தானாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் காரணம். அதற்காக நன்றியை தெரிவித்தக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 70 ஆண்டுகளாக, ஒரு பிரிவினருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, மனித உரிமை மீறல் என  மத்திய அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686831

----- (Release ID: 1686928) Visitor Counter : 16