ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 3.04 கோடி புதிய குழாய் இணைப்புகள்

Posted On: 07 JAN 2021 5:05PM by PIB Chennai

மத்திய அரசின் முன்னணி திட்டமான ஜல் ஜீவன்  திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ரத்தன்லால் கட்டாரியா ஆய்வு செய்தார்இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, குடிநீர்த்துறை கூடுதல் செயலாளர் திரு பாரத் லால் விளக்கினார்

அதன்பின் அமைச்சர் திரு ரத்தன்லால் கட்டாரியா கூறியதாவது:

சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 3.23 கோடி கிராம வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. ஆனால், ஓராண்டு காலத்துக்குள், 3.04 கோடி கிராம வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே ஜல் ஜீவன் திட்டத்தின் இலட்சிய இலக்கு. இதனால் எந்த வீடும் விடுபடாது.

100 சதவீத குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கிய முதல் மாநிலமாக கோவா உள்ளது. இதுவரை  27 மாவட்டங்கள், 458 வட்டார பகுதிகள், 33,516 கிராம பங்சாயத்துக்கள்,  66,210 கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தெலங்கானா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் 100 சதவீத இலக்கை நெருங்குகின்றன.

இவ்வாறு  திரு ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686804

-----


(Release ID: 1686913)