ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய ஜல் ஜீவன் இயக்க குழு மேற்கு வங்கத்திற்கு பயணம்

Posted On: 07 JAN 2021 2:47PM by PIB Chennai

மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டமான ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் என்னும் இலக்கை 2023-24-க்குள் அடைவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க எட்டு பேர் கொண்ட தேசிய ஜல் ஜீவன் இயக்க குழு இம்மாதம் 5 முதல் 8ந் தேதி வரை மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதும், சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துவதும் இந்தப் பயணத்தின் நோக்கங்களாகும்.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு வழங்கும் லட்சியமிக்க இலக்கை 2024-க்குள் அடைய மேற்கு வங்கம் திட்டமிட்டுள்ளது

 மொத்தமுள்ள 1.63 கோடி கிராமப்புற வீடுகளில் 7.61 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை மேற்கு வங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை 2023-24-க்குள் வழங்க மேற்கு வங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686761

*******

(Release ID: 1686761)


(Release ID: 1686798) Visitor Counter : 129