பாதுகாப்பு அமைச்சகம்

சிறந்த ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் நமது வீரர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்யும்: பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யெசோ நாயக்

प्रविष्टि तिथि: 06 JAN 2021 6:48PM by PIB Chennai

ஒரு லட்சமாவது குண்டு துளைக்காத உடையை ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம் எம் நரவணேயிடம் 2021 ஜனவரி 6 அன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யெசோ நாயக் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், எதிரிகளை எதிர்த்து போரிடும் நமது வீரர்களின் விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதற்கான அதன் உறுதியை அரசு காப்பாற்றியுள்ளதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நமது வீரர்களின் பாதுகாப்பு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

சிறந்த ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் நமது வீரர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்யும், அவற்றுக்கான தேவைகளுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் திரு ஸ்ரீபத் யெசோ நாயக் மேலும் கூறினார்.

திட்டமிட்டதை விட நான்கு மாதங்களுக்கு முன்னராகவே முதல் ஒரு லட்சம் பாதுகாப்பு கவசங்களை விநியோகித்த திருமிகு எஸ் எம் பி பி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686591

-----


(रिलीज़ आईडी: 1686637) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Telugu