நிதி அமைச்சகம்

ஆந்திராவில் சாலை மேம்பாடு: 646 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா, புதிய வளர்ச்சி வங்கி கையெழுத்து

Posted On: 06 JAN 2021 4:34PM by PIB Chennai

இந்திய அரசு, ஆந்திரப் பிரதேச அரசு, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து 323 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரண்டு கடன் ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டன.

முதல் திட்டமான ஆந்திரப் பிரதேச சாலைகள் மற்றும் பாலங்கள் மறுகட்டமைப்பு திட்டத்தின் மூலம் 1,600 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் இருவழிப் பாதைகளாக மேம்படுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்கள் சீரமைக்கப்படும்.

இரண்டாம் திட்டமான ஆந்திரப் பிரதேச மண்டல இணைப்பு மற்றும் ஊரக இணைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,400 கி.மீ நீளமுள்ள மாவட்ட சாலைகள் இருவழிப் பாதைகளாக மேம்படுத்தப்பட்டு, மாவட்ட சாலைகளில் இருக்கும் பாலங்கள் சீரமைக்கப்படும். சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் மூலம் ஆந்திர அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும்.

சமூகப் பொருளாதார மையங்களுக்கான போக்குவரத்து மற்றும் இணைப்பை இந்த இரு திட்டங்களும் மேம்படுத்தி, போக்குவரத்து திறனை அதிகரித்து, சாலைப் பாதுகாப்பு, பயணத்தின் தரம் ஆகியவற்றை உயர்த்தி, அனைத்து பருவகாலங்களின் போதும் பயனர்கள் சாலைகளை உபயோகிப்பதை உறுதி செய்யும். இத்திட்டங்களின் மூலம் சாலைகளின் தினசரி போக்குவரத்து திறன் 15,000 கார்கள் என உயர்ந்து, அடுத்த 20 வருடங்களில் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வளர்ச்சியை சமாளிக்கும்.

இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் திரு பல்தேவ் புருஷார்த்தா, ஆந்திராவின் சார்பில் போக்குவரத்து, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் முதன்மை செயலாளர் திரு எம் டி கிருஷ்ண பாபு, புதிய வளர்ச்சி வங்கியின் சார்பில் அதன் துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல்பாடுகள் அலுவலர் திரு சியான் ஜு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686551

******

 

(Release ID: 1686551)



(Release ID: 1686572) Visitor Counter : 119