சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

யமுனை ஆற்றில் அம்மோனிய நைட்ரஜன் : பரிசோதிக்க கூட்டு ஆய்வு, கண்காணிப்புப் படை

Posted On: 05 JAN 2021 6:30PM by PIB Chennai

யமுனை ஆற்றில் அம்மோனியா நைட்ரஜன் அதிகரிக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது, தில்லி, ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், நீர்பாசனத்துறை, தில்லி குடிநீர் வாரிய அதிகாரிகளின் கூட்டத்தை ஜனவரி 4ம் தேதியன்று  கூட்டியது. 

ஹரியானா, தில்லியில் உள்ள நகரங்களின் குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் , டேங்கர் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக திறந்துவிடப்படும் கழிவு நீர், ஆற்றுப் படுகைகளில் உள்ள கழிவுச் சேறுகள் ஆகியவை யமுனை ஆற்றில் அம்மோனியா நைட்ரஜன் அதிகரிப்புக்கு  காரணமாக இருக்கலாம் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக, தில்லி, ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்பாசனத்துறை, தில்லி குடிநீர் வாரிய துறையினர் அடங்கிய கூட்டு கண்காணிப்பு படையை உருவாக்க இந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

 **********************


(Release ID: 1686337) Visitor Counter : 207