மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

பசு அறிவியல் குறித்த தேர்வு : தேசிய காமதேனு ஆயோக் அறிவிப்பு

Posted On: 05 JAN 2021 6:25PM by PIB Chennai

நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் காமதேனு இருக்கை அல்லது காமதேனு கல்வி மையம் அல்லது காமதேனு ஆய்வு மையம் ஆகியவற்றை நிறுவும் நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு, நாடு முழுவதும் வேகமெடுத்து வருகிறது.

நாட்டுப் பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த புத்தகங்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கவு-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் எக்ஸாமினேஷன்என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.

பசுக்கள் குறித்த ஆர்வத்தை அனைத்து இந்தியர்களிடையே ஏற்படுத்தவும், பசுக்களின் அதிகம் அறியப்படாத நன்மைகளையும், தொழில் வாய்ப்புகளையும் குறித்து அறியச் செய்யவும் இது வழி வகுக்கும்.

2021 பிப்ரவரி 25 அன்று இந்த இணையவழித் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். இது குறித்த மேலும் தகவல்கள், அதிகாரப்பூர்வ இணைய தளங்களான http://kamdhenu.gov.in and http:// kamdhenu.blog ஆகியவற்றில் விரைவில் பதிவேற்றப்படும்.

ஆங்கிலம், இந்தி மற்றும் 12 பிராந்திய மொழிகளில் 100 மதிப்பெண்களுக்கு இந்த ஒரு மணி நேரத் தேர்வு நான்கு கட்டங்களாக நடைபெறும். அவை- (1) ஆரம்ப வகுப்புகள் முதல் எட்டாம் வகுப்பு வரை, (2) ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, (3) கல்லூரி மாணவர்களுக்காக, மற்றும் (4) பொதுமக்களுக்காக ஆகும். இந்த தேர்வுக்கு, தேசிய காமதேனு ஆயோக்கின் இணைய தளமான “kamdhenu.gov.in” / “kamdhenu.blog” –ல் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686299

**********************


(Release ID: 1686321) Visitor Counter : 437