ரெயில்வே அமைச்சகம்
புதிய வழித்தடத்தில், மணிக்கு 90 கி.மீ வேகத்துக்கு மேல் செல்கின்றன சரக்கு ரயில்கள்
Posted On:
04 JAN 2021 4:42PM by PIB Chennai
புதிதாக தொடங்கப்பட்ட நியூ குர்ஜா - பாபூர் சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடத்தில், தற்போது சரக்கு ரயில்கள் மணிக்கு 90 கி.மீட்டருக்கு மேலான வேகத்தில் செல்கின்றன. இது சரக்கு ரயில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
கிழக்கு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தில் நியு குர்ஜா - நியூ பாபூர் இடையே 351 கி.மீ தூரத்துக்கு புதிய பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த மாதம் 29ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தடையற்ற சரக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதை நிறைவேற்றும் வகையில், தற்போது இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் மணிக்கு 90 கி.மீ வேகத்துக்கு மேல் செல்கின்றன.
கடந்த ஜனவரி 3ம் தேதி வரை, இந்த வழித்தடத்தில் 53 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டள்ளன. நியூ குர்ஜாவிலிருந்து - நியூ பாபர் செல்லும் வழியில் அதிகபட்சமாக மணிக்கு 93.70 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில் சென்றது.
சரக்கு ரயில்கள் விரைவாக செல்வதன் மூலம், சரக்குகளை விரைவாக விநியோகிக்க முடியும் மேலும் சரக்கு போக்குவரத்து செலவும் குறையும்.
இந்த புதிய சரக்கு வழித்தடம் தொடங்கப்பட்ட பின் நிலக்கரி,சணல், பெட்ரோலியப் பொருட்கள், கன்டெய்னர்கள், இருப்பு மற்றும் எஃகு மற்றும் இதர கனிமங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் தேசிய தலைநகர் மண்டலம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல், பஞ்சாப், ஹரியானாவிலிருந்து உணவு தானியங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. உரங்கள், எஃகு ஆகியவை கிழக்கிந்திய பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685979
**********************
(Release ID: 1686108)
Visitor Counter : 188