சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பஞ்சாப் பதிந்தாவில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்: மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை நடத்தியது

Posted On: 03 JAN 2021 12:26PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் முகாமை, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், காணொலி காட்சி மூலம் கடந்த 2ம் தேதி தொடங்கி வைத்தார்.

தேசிய மூத்த குடிமக்கள் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் இரு தரப்பினருக்கும் உதவி மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் முகாம்களை  சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை நடத்துகிறது

பஞ்சாப் பதிந்தா மாவட்டத்தில் நடத்தப்படும் முகாமில் மொத்த 1907 பயனாளிகளுக்கு, 4590 உதவி உபகரணங்கள், ரூ.162.47 லட்சம் மதிப்பில் வழங்கப்படவுள்ளன. இவர்களில் 564 பேர் மாற்றுத்திறனாளிகள், 1343 பேர் மூத்த குடிமக்கள்.

பதிந்தாவில் இந்த முகாமை தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் கூறியதாவது:

பிரதமரின் தலைமையின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறதுசமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது போன்ற முகாம்கள் நடத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு நடத்தும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அமல்படுத்தப்பட்டபின், அவர்களுக்கான பிரிவுகள் 7 லிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு வேலையில் இட ஒதுக்கீடும் 3 சதவீதத்திலிருந்து முதல் 4 சதவீதமாகவும், உயர் கல்வியில் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6 லட்சம் செலவில் காக்ளியர் கருவிகள் பொருத்தப்படுகின்றன.

இவ்வாறு மத்திய இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685770

----(Release ID: 1685823) Visitor Counter : 9