உள்துறை அமைச்சகம்

தேசிய காவல் கே-9 சஞ்சிகை: முதல் பிரதியை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 02 JAN 2021 7:06PM by PIB Chennai

தேசிய காவல் கே-9 சஞ்சிகை”-யின் முதல் பிரதியை புதுதில்லியில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று வெளியிட்டார். காவல் நாய்கள் பற்றிய இந்தியாவின் முதல் வெளியீடாக இது அமைந்துள்ளது. உள்துறை செயலாளர் திரு அஜய் பல்லா, மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, “இந்தத் தனித்துவமான முன்முயற்சியின் மூலம் நாட்டில் செயல்படும் காவல் நாய்கள் குழு போன்ற பிரிவுகள் மேலும் வளப்படுத்தப்படும்”, என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு முதன்மையானதாக விளங்குகிறது. பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்குவதற்கு நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. ட்ரோன், செயற்கைக்கோள் போல சமூகத்தின் பாதுகாப்பில் காவல் நாய் படை உந்து சக்தியாக விளங்கும்”, என்று அவர் தெரிவித்தார். “போதைப்பொருட்களைக் கண்டறிவதிலும், தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதிலும் அவற்றை திறம்பட பயன்படுத்தலாம்என்று அவர் யோசனை தெரிவித்தார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் தேசிய காவல் கே-9 சஞ்சிகை, ஆண்டுக்கு இருமுறை- ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685668

-----



(Release ID: 1685697) Visitor Counter : 145