தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

உற்பத்தி, சுரங்கம், சேவை துறைகளுக்கான வரைவு மாதிரி நிலை ஆணை அரசிதழில் வெளியீடு

Posted On: 02 JAN 2021 10:46AM by PIB Chennai

தொழிலுறவுகள் சட்டத் தொகுப்பு 2020 பிரிவு 29-இன் கீழ் உற்பத்தி, சுரங்கம் மற்றும் சேவை துறைகளுக்கான வரைவு மாதிரி நிலை ஆணையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்கள்/ ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். சேவை துறையினரின் தேவைகளை கருத்தில் கொண்டு முதன் முதலாக இந்தத் துறைக்காக ஓர் பிரத்தியேக மாதிரி நிலை ஆணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி நிலை ஆணையின் முக்கிய அம்சங்கள்:

•        ஓர் தொழில்துறை ஸ்தாபனம் இந்த நிலை ஆணையை ஏற்றுக் கொண்டால்பல்வேறு இடங்களில் செயல்படும் அந்த ஸ்தாபனத்தின் இதர தொழில் பிரிவுகளுக்கும் இந்த ஆணை பொருந்தும்.

•        துறை சார்ந்த சிறப்பு தேவைகளைத் தவிர மூன்று துறைகளுக்குமான நிலை ஆணை சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

•        அனைத்து நிலை ஆணைகளும் தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு சார்ந்த தகவல்களைத் தொழிலாளர்களுக்கு வழங்க ஊக்குவிக்கன்றன.

•        சேவைத்துறைக்கான நிலை ஆணையில் வீடுகளில் இருந்து பணி செய்யும் கருத்துரு முறைப்படுத்தப்பட்டுள்ளது.

•        சுரங்கத் துறை ஊழியர்களுக்கும் ரயில் பயண வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே தற்போது இந்த வசதியைப் பெற்று வருகிறார்கள். இந்த மாதிரி நிலை ஆணைகள் நாட்டின் தொழில் துறையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்குவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685527

                                                                   ------



(Release ID: 1685659) Visitor Counter : 236