பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சகம் - ஆண்டு இறுதி கண்ணோட்டம் 2020

Posted On: 01 JAN 2021 7:57PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில வருமாறு:

* நாட்டின் உயர் பாதுகாப்பு மேலாண்மையில் பெரிய சீர்திருத்தத்துடன் கூடிய முன்னோடி முடிவாக, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற நான்கு நட்சத்திர ஜெனரல் பதவியிடத்தை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

* பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் 2020 ஜனவரி 1 அன்று பதவியேற்றார். பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும், செயலாளராகவும் அவர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

* எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல்கள் தடுக்கப்பட்டு, எண்ணற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

* கல்வான் பள்ளத்தாக்கைப் பாதுகாப்பதற்காக 20 வீரர்கள் தங்களது இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர்.

* எல்லைக்கோட்டில் தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் செய்வது ஒப்புக் கொள்ளப்படாது என்று சீனாவிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

* தற்சார்பு இந்தியா இலட்சியத்தை எட்டும் முயற்சியாக, பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 வெளியிடப்பட்டது. உள்நாட்டுத் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் இது வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685437

-----(Release ID: 1685514) Visitor Counter : 151