குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ekhadiindia.com என்னும் இணையதளத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தொடங்கியது

Posted On: 01 JAN 2021 5:27PM by PIB Chennai

புத்தாண்டை முன்னிட்டு, ekhadiindia.com என்னும் இணையதளத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தொடங்கியுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 50,000-க்கும் அதிகமான காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களை 500 பிரிவுகளில் இந்த இணையதளம் வகைப்படுத்தியுள்ளது.

பிரதமரின்தற்சார்பு இந்தியாஇலட்சியத்தை அடைய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கான சூழலியலை கட்டமைப்பதற்கான நடவடிக்கையே இந்த இணையதளமாகும்.

இணையதளத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. ஏ. கே. சர்மா, நமது நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலனே நமது முன்னுரிமையாக உள்ளது என்றார்.

நுகர்வோரை நேரடியாக சென்றடைவதற்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முதல் முயற்சியாக இந்த இணைய தளம் விளங்குகிறது.

 

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இணையவழி வணிகம் மற்றும் இணையவழி சந்தைப்படுத்துதலில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இறங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685399

-----



(Release ID: 1685445) Visitor Counter : 201