சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆண்டு நிறைவு அறிக்கை

Posted On: 31 DEC 2020 4:59PM by PIB Chennai

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆண்டு நிறைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஹுணர் ஹாட்:

•     கொரோனா தொற்றினால் ஏற்பட்ட சவால்களை சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வாய்ப்புகளாக மாற்றி கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்காக ஹுணர் ஹாட் அறிமுகப்படுத்தப்பட்டது.

•     http://hunarhaat.org என்ற இணையதளத்தின் ‌மூலம் கைவினைப் பொருள்களை பொது மக்கள் வாங்கலாம்.

•     தற்சார்பு இந்தியா, உள்ளூர்ப் பொருள்களை ஊக்குவித்தல் ஆகிய கருப்பொருள்களில் ஹுணர் ஹாட் நடைபெற்றது.

•     கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இருபதாவது ஹுணர் ஹாட் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் கலந்துகொண்டு கலைஞர்களை ஊக்குவித்தனர்.

•     பிப்ரவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் ஹுணர் ஹாட் கண்காட்சி குறித்தும் உள்ளூர் கலைப்பொருள்களை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

•     2020ஆம் ஆண்டு 7 ஹுணர் ஹாட் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்த நிகழ்ச்சி ஜனவரி 23 முதல் 31ஆம் தேதி வரை லக்னோவில் நடைபெறவிருக்கிறது.

ஹஜ் பயணம் தொடர்பான அனைத்துப் பணிகளும் 100 சதவீதம் மின்னணுமயமாக்கல்:

•     கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான பணிகள் முழுவதும் இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.

•     இந்தப் பயணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை டிசம்பர் 10-இல் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் திரு.முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.

•     இதுவரை சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் 680 விண்ணப்பங்கள் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியே பயணிப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

•     2021 ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள ஹஜ் பயணம் அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், தில்லி, குவஹாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 10 நகரங்களில் இருந்து துவங்கும்.

•     உலகளவில் ஹஜ் பயணத்திற்கான அனைத்துப் பணிகளையும் 100 சதவீதம் மின்னணு வழியில் மேற்கொள்வதில்  இந்தியா முதல் நாடாகத் திகழ்கிறது.

இஸ்லாமிய மகளிர் உரிமை தினம்:

•     முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதன் முதலாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இஸ்லாமியப் பெண்கள் உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டது.

•     இது குறித்து நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மற்றும் ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

நை உடான் திட்டம்:

•     நை உடான் திட்டத்தின் கீழ் சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த 22 ஏழை இளைஞர்கள் குடிமைப் பணித் தேர்வுகள் 2019-இல் வெற்றி பெற்றனர்.

பிரதமர் ஜன் விகாஸ் காரியகிரம்:

•     பிரதமர் ஜன் விகாஸ் காரியகிரம் திட்டத்தின் கீழ் பின்தங்கிய மற்றும் சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில்  99 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லே- கார்கிலில் வக்பு வாரியங்கள்:

•     ஜம்மு காஷ்மீர் மற்றும் லே - கார்கிலில் வக்பு வாரியங்கள் அமைக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

•     இதையடுத்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

•     இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஜம்மு-காஷ்மீர், லே - கார்கிலில்  வக்பு வாரியங்கள் அமைப்பது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19:

•     சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பாக நடமாடும் மருத்துவ வாகனம் புதுதில்லியின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

•     அனைத்து சுகாதார வசதிகளுடன் கூடிய இந்த வாகனத்தை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685102

**********************

(Release ID: 1685102)



(Release ID: 1685182) Visitor Counter : 161