பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஆண்டு நிறைவு அறிக்கை: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

Posted On: 31 DEC 2020 5:17PM by PIB Chennai

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆண்டு நிறைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

•     பிரதமரின் உஜ்வாலா திட்டம்: பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை அதிகபட்சமாக மூன்று எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நவம்பர் 30ஆம் தேதிவரை 7.5 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

•     திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை: இதற்கான ஏலத்தில் ஐந்தாம் சுற்றின் கீழ் 11 எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகளுக்கான ஒப்பந்தங்கள் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தாகின.

•     இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு: எரிவாயு வர்த்தக அமைப்பான இந்தியன் காஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு, விநியோகம் அடிப்படையிலான இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான வர்த்தக அமைப்பாகும். முதலாவது எரிவாயு வர்த்தக அமைப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

•     வாகன எரிபொருள் தொலை  நோக்கு மற்றும் கொள்கை: சுத்தமான எரிபொருள் கிடைக்க வழி வகை செய்யும் இந்தக் கொள்கையின் படி  வாகன எரிபொருளில் பிஎஸ்- VI தரம் ஏப்ரல் 1, 2020 முதல் அமல்படுத்தப்பட்டது.

•     தேசிய எரிவாயுத் தொகுப்பு:  தேசிய எரிவாயுத் தொகுப்பின் கீழ் 2020ஆம் ஆண்டில் மொத்தமாக 1544 கிலோமீட்டர் எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

•     சர்வதேச ஒத்துழைப்பு/ ஒப்பந்தங்கள்/ உடன்பாடுகள்:

எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திரமோடி முதன் முதலாக நான்காவது செரா வீக் இந்தியா எரிசக்தி மன்றத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். கச்சா எண்ணெய் விலைச் சரிவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் படூர் ஆகிய மூன்று கேந்திர பெட்ரோலிய இருப்புகளில் முழுக் கொள்ளளவை நிரப்பி, அதன் மூலம் ரூ.5000 கோடி சேமிக்கப்பட்டது.

•     எத்தனால் கலந்த பெட்ரோல்: எத்தனால் விநியோக ஆண்டு 2019-20-இல் நவம்பர் 30-ஆம் தேதி வரை 172.43 கோடி லிட்டர் எத்தனால்  கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685110

**********************           


(Release ID: 1685165) Visitor Counter : 183