இந்திய போட்டிகள் ஆணையம்
ஏபிஐ ஹோல்டிங்கஸ் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
31 DEC 2020 11:06AM by PIB Chennai
சந்தைப் போட்டிகள் சட்டம், 2002, 31(1)வது பிரிவின் கீழ், ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் 8 சதவீத பங்குககளை டிபிஜி குரோத் வி எஸ்எப் மார்க்கெட்ஸ் நிறுவனம் வாங்க இந்திய சந்தைப் போட்டிகள் ஆணையம்(சிசிஐ) நேற்று ஒப்புதல் அளித்தது.
பங்குகளை வாங்கும் நிறுவனம், சிங்கப்பூரில் புதிதாக இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனம் ஆகும். இதற்கு தற்போது வரை இந்தியாவில் எந்த தொழிலும், முதலீடும் இல்லை. பங்குகளை வாங்கும் நிறுவனத்துக்கு டிபிஜி குளோபல், எல்எல்சி, மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கொரிய முதலீட்டு நிறுவனம் இணைந்து நிதியளிக்கும்.
ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் மற்றும் ஏபிஐ ஹோல்டிங்ஸ் குழுவின் தாய் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
* மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் மொத்த விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
* மருத்துவ துறையில் போக்குவரத்து சேவைகளையும் வழங்குகிறது.
மருந்து பொருட்கள், மருத்துவ சாதனங்கள் விற்பனையை எளிதாக்குவதற்கான சந்தைகள் உள்ளிட்ட இ-வர்த்தக தளங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துக்களை வைத்துள்ளது.
* மருந்து, ஆயுர்வேத மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள், மருத்துவ சாதனங்கள், சுகாதார பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள், மூலிகை பொருட்கள் மற்றும் துணை உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684963
*******
(Release ID: 1684963)
(रिलीज़ आईडी: 1685053)
आगंतुक पटल : 184