சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆண்டு இறுதி கண்ணோட்டம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
Posted On:
30 DEC 2020 12:40PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த ஆறு ஆண்டுகளில், பல கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. மக்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த ஆண்டில் மேற்கொண்ட பணிகளின் முக்கியமான அம்சங்கள்:
* 2019-20ஆம் ஆண்டில், 10,237 கி.மீ தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன.
* தொடர் முயற்சிகள் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் தூரம் கடந்த 2014ஆம் ஆண்டில் 91,287 கி.மீ லிருந்து 2020 டிசம்பர் 20 வரை 1,36,155 கி.மீ தூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
* 2020-21ஆம் ஆண்டில் (நவம்பர் வரை) 6,207 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 கி.மீ தூரத்துக்கும் கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
* 100 சுற்றுலாத் தளங்களில் சாலைகள் இணைப்பை மேம்படுத்தவும், 45 நகரங்களில் பைபாஸ் சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
* அமைச்சகத்தின் செலவு கடந்த 2013-14ஆம் ஆண்டில் ரூ.33,745 கோடியிலிருந்து 2019-20ஆம் ஆண்டில் ரூ.1.50,841 கோடியாக அதிகரித்துள்ளது.
* 2019-20ஆம் ஆண்டில் ரூ.21,926 கோடி தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் நவம்பர் வரை ரூ.8,186 கோடி தனியார் முதலீடு பெறப்பட்டுள்ளது.
* நாட்டில் தடையற்ற சரக்குப் போக்குவரத்தை உறுதி செய்ய பன்முக மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காங்கள் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி 35, பன்முக மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் நாடு முழுவதும் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. இங்கு சரக்குக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், மிகப் பெரிய சரக்கு முனையங்கள் உட்பட பல வசதிகள் இருக்கும். இதற்கு என்எச்எல்எம்எல் என்ற தனி நிறுவனம் அமைக்கப்படுகிறது.
* பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக பிரத்யேக தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
* சுங்கச்சாவடி இயக்குவதை மாற்றும் முறை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ. 1 இலட்சம் கோடி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
* இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வருவாயை அதிகரிக்க கட்டமைப்பு முதலீடு அமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வாகன், சாரதி என்ற இரண்டு அமைப்புகள் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. வாகனப் பதிவு, அனுமதி, ஓட்டுநர் உரிமம் போன்ற பல பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறையானது, 33 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684574
**********************
(Release ID: 1684819)
Visitor Counter : 272