குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கோவிட்-19-இன் போது ஜம்மு காஷ்மீரில் உள்ள காதி கைவினைக் கலைஞர்களுக்கு ரூ. 30 கோடியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியது
Posted On:
30 DEC 2020 2:13PM by PIB Chennai
கோவிட்-19-இன் போது ஜம்மு காஷ்மீரில் உள்ள காதி கைவினைக் கலைஞர்கள் மீது சிறப்பு கவனத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செலுத்தியது. நாடு முழுவதும் நீடித்த வேலைவாய்ப்பை உருவாக்க தொய்வின்றி உழைத்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம். மத்திய அரசின் கவனம் பெற்ற பகுதியான ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் ரூ.29.65 கோடியை வழங்கியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 84 காதி நிறுவனங்களுடன் இணைந்துள்ள 10,800 காதி கைவினைக் கலைஞர்களுக்கு 2020 மே முதல் செப்டம்பர் வரை இத்தொகை வழங்கப்பட்டது.
உற்பத்தி நடவடிக்கைகளுடன் நேரடியாக இணைந்துள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாற்றியமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு உதவித்திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. கைவினைக் கலைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டது.
கோவிட்-19-இன் போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள காதி நிறுவனங்களின்
மாற்றியமைக்கப்பட்ட சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு உதவித் திட்ட நிலுவைத் தொகைகளை செலுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையையும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் எடுத்தது.
2016-17-ஆம் ஆண்டு முதல் 2018-19-ஆம் வருடத்திற்கான இந்த நிலுவைத் தொகைகள் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் செலுத்தப்படாமல் இருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684595
**********************
(Release ID: 1684803)
Visitor Counter : 222