பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் முனையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 DEC 2020 3:47PM by PIB Chennai

சென்னை-பெங்களூர் தொழில் பெருவழிப் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டனம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

கிரேட்டர் நொய்டாவில் பன்முக தளவாட மையம் மற்றும் பன்முக போக்குவரத்து மையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கு மொத்தமாக ரூபாய் 7,725 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2.8 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேற்கண்ட திட்டங்களை தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை முன்மொழிந்து உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684629

------

 (Release ID: 1684743) Visitor Counter : 278