நிதி அமைச்சகம்

பங்கேற்பு ஒப்பந்தங்கள் வாயிலாக வங்கி நிறுவனங்கள் சொத்துக்களை பரிமாற்றம் செய்ய ஐஎஃப்எஸ்சிஏ அனுமதி

प्रविष्टि तिथि: 30 DEC 2020 12:18PM by PIB Chennai

வங்கி நிறுவனங்கள் இதர நிதி நிறுவனங்களுக்கு அவற்றிடம் இருந்துஇந்தியாவில் வசிப்போர் மற்றும் இந்தியாவிற்கு வெளியில் வசிப்போருக்கு அவர்களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட நிலையான  நிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் வாயிலாக சொத்துக்களை பரிமாற்றம் செய்ய சர்வதேச நிதி சேவை மையங்களின் ஆணையம் (ஐஎஃப்எஸ்சிஏஅனுமதி  அளித்துள்ளது.

நிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் மூலம் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்வது பல்வேறு துறைகளில் குறிப்பாக நிதி வர்த்தகத் துறையில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறைநிலையான இடர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு நிறுவனங்களுக்கு (வாங்குவோர் மற்றும் விற்போர்இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சர்வதேச நிதி சேவை மையங்களின் ஆணையத்தில் வங்கி நிறுவனங்கள் மூலமாக வெளிநாட்டு சொத்துக்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684571

------


(रिलीज़ आईडी: 1684705) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi