மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆறாவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-ஐ குடியரசுத் தலைவர் காணொலி வாயிலாக நாளை வழங்குகிறார்

Posted On: 29 DEC 2020 6:15PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், நாளை (டிசம்பர் 30) காலை 11 மணிக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020- காணொலி வாயிலாக வழங்குவார். டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் முதன் முறையாக இந்த விருதுக்கான அனைத்துப் பணிகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறுகின்றன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவலியல் மையம், மின் ஆளுமை மற்றும் அரசு சேவைகளை மின்னணு முறையில் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னணு இந்தியா விருதுகளை வழங்குகின்றது. மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், செயலாளர் திரு. அஜய் சாவ்னே மற்றும் இதர பிரமுகர்கள் புதுதில்லி, கொல்கத்தா, சென்னை, போபால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஆறாவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020-இல் பெருந்தொற்று காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள்மின்னணு ஆளுமையில் சிறப்பாகப் பணியாற்றிய அமைச்சகம்/ துறை (மத்திய), மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இவை தவிர தேசிய பொது மின்னணு தளத்தை சிறப்பாக வடிவமைத்து செயல்படுத்தியமைக்கான விருதும் வழங்கப்படும்.

இந்த விருது வழங்கும் விழாவை நாளை காலை 11 மணிக்கு  தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும், கீழ்காணும் சமூக ஊடகங்களிலும் நேரலையாகக் காணலாம்:

http://webcast.gov.in/digitalindiaawards

https://www.youtube.com/nationalinformaticscentre

https://twitter.com/NICMeity

https://www.facebook.com/NICIndia

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684422

                                                                   ------(Release ID: 1684504) Visitor Counter : 15