அணுசக்தி அமைச்சகம்

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது

Posted On: 29 DEC 2020 5:09PM by PIB Chennai

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

இந்த சாதனைக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்தை மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.

பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள திசுவைக் கையாள்வது மருத்துவர்களுக்கு மிகவும் எளிமையானது. மேலும், இது உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தச் சாதனை குறித்துப் பேசிய டாக்டர்.சிங், கடந்த சில வருடங்களாக பொதுமக்களுக்குப் பயனளிக்கும் செயல்பாடுகள் மீது அணுசக்தித் துறை அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அதன் வெளிப்பாடாக இந்தத் திசுவின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684400

-----(Release ID: 1684467) Visitor Counter : 255