குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மக்களின் வாழ்க்கையை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதே அறிவியலின் இறுதி நோக்கம் : குடியரசு துணைத் தலைவர்

Posted On: 29 DEC 2020 4:28PM by PIB Chennai

மக்களின் வாழ்க்கையை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதே அறிவியலின் இறுதி நோக்கம் என கூறிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, புதுமை மற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கான தளத்தை அறிவியல் நிறுவனங்கள்  ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் மையத்தின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மையத்தின் (கிரஸ்ட்) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கூறியதாவது:

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அறிவியல் அடித்தளமாக உள்ளது. ஏனெனில் இது மீண்டும் மீண்டும் சோதனைகள் மூலம் சரிபார்க்கக்கூடிய  உண்மைகளைக் கையாள்கிறதுஇதனால் இளைய தலைமுறையினரிடம் அறிவியல் மனநிலையை வளர்க்க வேண்டியது அவசியம்பெண் விஞ்ஞானிகளுக்கு சம அளவிலான வாய்ப்புகளும், ஊக்குவிப்பும் அளிக்கப்பட வேண்டும்.

பழங்காலங்களிலிருந்து, வானியல் மற்றும் கணிதத்தில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த பாரம்பரியம் உள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள வசதிகள், பிரதமர் தொடங்கிய தற்சார்பு இந்தியாவுக்கு உதவும். இந்தியாவின் வானியல் பாரம்பரியம்உலகிற்கு நன்கு தெரியும். பண்டைய காலங்களிலிருந்து நவீன யுகம்  வரை வானியல் உலகிற்கு இந்தியா பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது.

இத்தகைய மெகா அறிவியல் திட்டங்களில் பங்கேற்பது, இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒரு தளத்தை வழங்கும். தொழில்கள், உயர் தொழில்நுட்பத் துறையில் திறனை வளர்க்க  உதவும். தொழில்நுட்பத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிகம் பேசப்பட்ட இஸ்ரோவின் மங்கள்யாண் திட்டம், வான் ஆராய்ச்சிக்கு உருவாக்கிய இந்தியாவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள், சூரிய ஆய்வுக்காக விரைவில் ஏவப்படவுள்ள ஆதித்யா எல் 1 திட்டம் ஆகியவை சில உதாரணங்கள்.

உலகளாவிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த தேசிய விஞ்ஞான முயற்சிகளில், இந்தியாவின் பயணம் இயல்பானதாகத் தோன்றுகிறது. ஒருவருடைய வாழ்வில் தாய்மொழி முக்கியமானது. ஒருவர் தனது தாய், தாய்நாடு, தாய்மொழி மற்றும் குருவை மதிக்க வேண்டும். எங்கு வசித்தாலும், நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற வேண்டும். கற்று, சம்மாதித்து மீண்டும் தாய் மண்ணுக்குத் திரும்பி, சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும். கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவால் திறம்படச் செயல்பட முடிகிறது. இதற்கு, நமது கிராம மக்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களும், இயற்கையான வாழ்க்கை முறையும் ஒரு காரணம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், யோகா, இயற்கையுடன் இணைந்து வாழ்வது  போன்றவற்றை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாடு தெரிவித்தார்.

30 மீட்டர் நீள தொலைநோக்கிக்கான கண்ணாடிகளை பாலிஷ் செய்யும் மையம், விண்வெளி அறிவியலுக்கான எம்.ஜி.கேமேனன் பரிசோதனைக் கூடத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு மையம், ஆகியவற்றையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்இமாலய சந்திரா தொலைநோக்கியின் தொலைதூர செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். இந்த மையத்தின் விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் அவர் பாராட்டினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684383

-----(Release ID: 1684443) Visitor Counter : 7