பிரதமர் அலுவலகம்

130 கோடிக்கும் அதிகமான மக்களின் மிகப் பெரும் பொருளாதார மற்றும் கேந்திர சக்தியாக தில்லி விளங்குகிறது, அதன் மேன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்


தில்லியில் 21-ஆம் நூற்றாண்டின் ஈர்க்கும் தலங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன: பிரதமர்

Posted On: 28 DEC 2020 2:06PM by PIB Chennai

நாட்டின் ஒவ்வொரு நகரமும், சிறியதோ அல்லது பெரியதோ, இந்தியாவின் பொருளாதார முனையமாக மாறப்போகிறது. எனினும் தேசிய தலைநகரமாகவும் உலகளவில் தனது இருப்பிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள தில்லி 21ஆம் நூற்றாண்டின் மேன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். இந்த பழமையான நகரை நவீனமயமாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். முதன்முறையாக ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை மற்றும் விமானநிலைய மார்க்கத்தில் தில்லி மெட்ரோவின் தேசிய பொதுப் போக்குவரத்து சேவையை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பின் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

வரிச் சலுகைகளின் மூலம் மின்சார போக்குவரத்தை அரசு ஊக்குவித்து வருவதாக திரு மோடி கூறினார். தலைநகரின் பழமையான உள்கட்டமைப்பானது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய உள்கட்டமைப்பால் மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான காலனிகளை முறைப்படுத்தி அதன் வாயிலாக குடிசை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பழமையான அரசுக் கட்டிடங்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன கட்டிடங்களாக மாற்றுவது போன்ற முயற்சிகள் மூலம் இந்த சிந்தனை வெளிப்படுத்தப்படுகின்றது.

பழமையான சுற்றுலாத்தலமாக விளங்கும் தில்லியில் 21-ஆம் நூற்றாண்டின் கண்கவர் தலங்களை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச மாநாடுகள், சர்வதேச கண்காட்சிகள், மற்றும் சர்வதேச வர்த்தக சுற்றுலா ஆகியவற்றின் விரும்பத்தக்கத் தலமாக தில்லி விளங்குவதால் நாட்டிலேயே மிகப்பெரும் மையம் தலைநகரின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் புதிய நாடாளுமன்றம், மிகப்பெரும் பாரத் வந்தனா பூங்கா ஆகியவற்றை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் நகரத்தின் தோற்றமும் மாறும்.

ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ சேவை மற்றும் தில்லி மெட்ரோவின் விமான நிலைய வழித்தடம்  வரையில் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு தலைநகரின் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், “130 கோடிக்கும் அதிகமான மக்களின் மிகப் பெரும் பொருளாதார மற்றும் கேந்திர சக்தியாக தில்லி விளங்குகிறது, அதன் மேன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்என்று வலியுறுத்தினார்.

*****************



(Release ID: 1684126) Visitor Counter : 172