சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 2.77 லட்சமாக குறைந்தது

Posted On: 28 DEC 2020 10:50AM by PIB Chennai

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 2,77,301-ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.72 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில், 1,389 பேர் குறைந்துள்ளனர். புதிதாக 20,021 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21,131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை  (97,82,669) நெருங்குகிறது. குணமடைந்தோர் பங்கு 95.83 சதவீதமாக அதிகரித்துள்ளது

நம்நாட்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் பாதிப்பு 7,397 ஆக உள்ளது. ஆனால் உலக சராசரி 10,149 ஆக உள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு பாதிப்பு இந்தியாவை விட மிகஅதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு இறப்பு 107 என உள்ளது. இது உலகிலேயே மிகக்குறைவானது ஆகும்.  உலக சராசரி இறப்பு 224 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684058

*****************



(Release ID: 1684118) Visitor Counter : 130