நிதி அமைச்சகம்

அரசின் தங்கப் பத்திரத் திட்டம் 2020-21(தொடர் 9)-வெளியீட்டு விலை

Posted On: 26 DEC 2020 2:57PM by PIB Chennai

2020 அக்டோபர் 09-ஆம் தேதியிட்ட இந்திய அரசின் அறிவிக்கை No.4(4)-B(W&M)/2020–க்கு ஏற்ப, 2021 ஜனவரி 5 என்ற தீர்வுத்தேதியுடன் 2020 டிசம்பர் 28 முதல் 2021 ஜனவரி 1 வரையிலான காலகட்டத்துக்கு அரசின் தங்கப் பத்திரங்கள் 2020-21 (தொடர் 9) வர்த்தகம் தொடங்கப்பட உள்ளது.

சந்தா காலகட்டத்துக்கு உட்பட்ட பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் ரூ.5,000 (ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்) ஆக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ.50 (ஐம்பது ரூபாய் மட்டும்) தள்ளுபடி வழங்கப்படும்.

இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.4,950 ஆக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683790

-----



(Release ID: 1683849) Visitor Counter : 193