உள்துறை அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் உரையாடியபோது திரு அமித் ஷா புது தில்லியில் அவர்களுடன் இணைந்து கொண்டார்

Posted On: 25 DEC 2020 8:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் இன்று உரையாடிய போது மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

அப்போது பேசிய திரு. அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உறுதியோடு உள்ளதாக தெரிவித்தார்.

திரு. நரேந்திர மோடி அரசின் விவசாயிகள் நலக்கொள்கைகள் மற்றும் வேளாண் சீர்திருத்தங்கள் மீது கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உற்சாகத்துடன் நம்பிக்கை தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.

நாட்டிலுள்ள ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக  இன்று செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இதன் மூலம் அவர்கள் தங்களது விவசாயம் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மீது மோடி அவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பையும் உறுதியையும் தாம் பாராட்டுவதாகக் கூறிய உள்துறை அமைச்சர், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683718

-----


(Release ID: 1683733) Visitor Counter : 191