பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பின் அறிக்கை: மத்திய உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா வெளியீடு

Posted On: 25 DEC 2020 1:52PM by PIB Chennai

மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய  அறிக்கையைமத்திய உள்துறைச் செயலாளர் .கே.பல்லா இன்று வெளியிட்டார்.

மத்தியப் பணியாளர்  மற்றும் பயிற்சிதுறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்த மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் (-எச்ஆர்எம்எஸ்) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை  மத்திய உள்துறை மற்றும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலாளர்  .கே. பல்லா இன்று வெளியிட்டார். இந்த -எச்ஆர்எம்எஸ் அமைப்பில், 5 தொகுப்புகளின் 25 பயன்பாடுகள்  இருந்தன.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய திரு பல்லா, ‘‘வரும் காலங்களில் அனைத்து அமைச்சகங்களுக்கும் இந்த -எச்ஆர்எம்எஸ்  மிகச் சிறந்த உபகரணமாக இருக்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு உபகரணம், கொள்கைகளை உருவாக்கவும், பணியாளர் சார்ந்த விஷயங்களைக் கையாளவும் மிகவும் உதவிகரமாக இருக்கும்இந்த  -எச்ஆர்எம்எஸ்  இதர அமைச்சகங்களிலும் விரிவாக பயன்படுத்துதைப் பிரபலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

 

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் திருமதி ராஷ்மி சவுத்திரி கூறுகையில் ‘‘-எச்ஆர்எம்எஸ்  மூலம் அரசு ஊழியர்கள், தங்கள் பணி தொடர்பான அனைத்து விஷயங்களையும் மின்னணு முறையில் பெறலாம் என்பதால், இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த -எச்ஆர்எம்எஸ்  மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் பணி விவரப் புத்தகம், விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, சம்பளம், கடன் , முன்பணம், சுற்றுலா உட்பட பல விவரங்களை ஒரே தளத்தில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683566

                                                                 -----


(Release ID: 1683618) Visitor Counter : 233