சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த செவிலியர்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்கும் பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
24 DEC 2020 4:36PM by PIB Chennai
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் பயிற்சியை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்த்தின் நிதி ஆதரவோடு இது செயல்படுத்தப்படும்.
இணையம் மூலமான கற்றல் மற்றும் நேரடியான பயிற்சிப்பட்டறைகள் மூலம் இந்த ஒன்பது நாள் பயிற்சி முகாம் நடத்தப்படும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி இந்தப் பயிற்சி வழங்கப்படும்.
கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சில ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான பயிற்சி வழங்கப்படும்.
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் திரு.சுரேஷ் குமார் சர்மா மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் வணிக விரிவாக்கம் மற்றும் பெருநிறுவன உறவுகள் பிரிவின் தலைவர் திரு விஷால் சின்ஹா இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683327
----
(रिलीज़ आईडी: 1683455)
आगंतुक पटल : 145