குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விவசாயிகளுடன் உரையாடிய குடியரசு துணைத் தலைவர், பேச்சுவார்த்தை ஒன்றே சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழி என்று கூறினார்

प्रविष्टि तिथि: 23 DEC 2020 5:45PM by PIB Chennai

விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை தான் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் விவசாயிகளுடன் உரையாடிய அவர், எந்த ஒரு பிரச்சனையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்று கூறினார்.

விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விவசாயத்துடன் இணைந்துள்ளதாக திரு நாயுடு கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் உடனான உரையாடலின் போது, தங்களது அனுபவங்கள் குறித்து விவசாயிகள் பகிர்ந்து கொண்டனர். இயற்கை விவசாயத்தின் மூலமாக அதிக மகசூல் மற்றும் நன்மை கிடைப்பதாக அவர்கள் கூறினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683017

                                                                        -----


(रिलीज़ आईडी: 1683082) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu