நிதி அமைச்சகம்

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்

Posted On: 23 DEC 2020 5:19PM by PIB Chennai

மத்திய பட்ஜெட் 2021-22-க்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் 2020 டிசம்பர் 14 முதல் 23 வரை காணொலி முறையில் நடைபெற்றன. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்த ஆலோசனைக் கூடங்களை இன்று நிறைவு செய்தார்.

ஒன்பது பங்குதாரர் குழுக்களைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 15 காணொலிக் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிதி மற்றும் மூலதனச் சந்தைகள்; சுகாதாரம்; கல்வி, ஊரக வளர்ச்சி; தண்ணீர் மற்றும் சுகாதாரம்; தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்பு; தொழில்கள், சேவைகள் மற்றும் வர்த்தகம்; உள்கட்டமைப்பு, எரிசக்தி, பருவநிலை மாற்றம்; விவசாயம், வேளாண் பதப்படுத்துதல் தொழில்; தொழிலதிபர்கள்; மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், நிதித்துறைச் செயலாளர் டாக்டர். ஏ. பி. பாண்டே, தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682997

------



(Release ID: 1683042) Visitor Counter : 174