நிதி அமைச்சகம்
கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி மற்றும் கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவை தொடர்ந்த வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு ஆய்வு செய்யவுள்ளது
प्रविष्टि तिथि:
23 DEC 2020 2:08PM by PIB Chennai
முதலீடுகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா-இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், மத்திய அரசுக்கு எதிராக கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி மற்றும் கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவை தொடர்ந்த வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும், நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு கவனமாக ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின், சட்ட ரீதியான தீர்வுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.
*****************
(रिलीज़ आईडी: 1682962)
आगंतुक पटल : 260