வரிசை எண்
|
ஆவணங்கள்
|
இந்தியாவின் சார்பில்
|
வியட்நாம் சார்பில்
|
1.
|
அமைதி, வளம் மற்றும் மக்களுக்கான இந்திய-வியட்நாம் கூட்டு லட்சியம்.
ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள், பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள் மற்றும் ஆர்வங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு வருங்கால இந்திய-வியட்நாம் விரிவான மூலோபாயக் கூட்டுக்கு வழிகாட்டுதல்
|
இரு நாடுகளின் பிரதமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
|
|
2.
|
விரிவான மூலோபாயக் கூட்டை மேலும் செயல்படுத்துவதற்காக 2021-2023 வரையிலான காலத்துக்கான செயல் திட்டம்.
”அமைதி, வளம் மற்றும் மக்களுக்கான கூட்டு லட்சியத்தை’ செயல்படுத்துவதற்காக 2021-2023 காலகட்டத்தில் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்துதல்
|
டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்
|
திரு பம் பின் மின், துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்
|
3.
|
இந்திய ராணுவ தளவாடங்கள் உற்பத்தி துறை, வியட்நாம் ராணுவ தொழில் துறைக்கிடையேயான ராணுவ தொழில் கூட்டை செயல்படுத்துவதற்கான ஏற்பாடு.
இரு நாடுகளின் ராணுவ தொழில்களுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவதற்கான கட்டமைப்பை வழங்குதல்
|
திரு சுரேந்திர பிரசாத் யாதவ், இணை செயலாளர் (கடற்படை அமைப்புகள்)
|
மேஜர் ஜெனெரல் லுவோங் தன்ஹ் சுவோங்க், துணை தலைவர்
|
4.
|
வியட்நாமில் உள்ள நா திரங்கில் ராணுவ மென்பொருள் பூங்காவுக்கு இந்திய நிதியுதவியான 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்காக இந்திய தூதரகம் மற்றும் ஹனோய் மற்றும் தொலைதொடர்பு பல்கலைக்கழகம், வியட்நாம் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே
ஒப்பந்தம்.
மென்பொருள் பயன்பாடுகள் துறையில் பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கும் விதமாக ஹனோய் மற்றும் தொலைதொடர்பு பல்கலைக்கழகத்தில் உள்ள ராணுவ மென்பொருள் பூங்காவில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குதல்
|
திரு பிரணய் வெர்மா, வியட்நாமுக்கான இந்திய தூதர்
|
கர்னல். லே சுவான் ஹுங், கல்லூரி தலைவர்
|
5.
|
ஐக்கிய நாடுகள் அமைதிகாத்தலுக்காக ஐ நா அமைதிகாத்தல் நடவடிக்கைகள், இந்தியா மற்றும் வியட்நாமின் அமைதிகாத்தல் செயல்பாடுகள் துறைக்கிடையே ஏற்பாட்டை செயல்படுத்துதல்,
ஐ நா அமைதிகாத்தலில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை கண்டறிதல்.
|
மேஜர் ஜெனரல் அனில் கே ஆர் காஷித், கூடுதல் தலைமை இயக்குநர்
|
மேஜர் ஜெனரல் ஹொஆங்க் கிம் புங்க், இயக்குநர்
|
6.
|
இந்திய அணுமின் ஒழுங்குமுறை வாரியம் மற்றும் கதிரியக்கம் மற்றும் அணு பாதுகாப்புக்கான வியட்நாம் முகமைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
கதிரியக்கம் மற்றும் அணு பாதுகாப்பில் இரு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.
|
திரு ஜி நாகேஸ்வர ராவ், தலைவர்
|
பேராசிரியர் நுயென் டுவன் கய், தலைமை இயக்குநர்
|
7.
|
சி எஸ் ஐ ஆர் இந்திய பெட்ரோலிய நிறுவனம் மற்றும் வியட்நாம் பெட்ரோலிய நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
|
டாக்டர் அஞ்சன் ராய், இயக்குநர்
|
திரு நுயென் அன்ஹ் டுவோ, இயக்குநர்
|
8.
|
இந்தியாவின் டாட்டா நினைவு மையம் மற்றும் வியட்நாம் புற்று நோய் மருத்துவமனைகிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, சுகாதார சேவைகள், புற்று நோய் நோயாளிகளின் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்டவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்தல்
|
டாக்டர் ராஜேந்திர ஏ பாட்வே, இயக்குநர்
|
திரு. லே வான் குவாங்க், இயக்குநர்
|
9.
|
இந்தியாவின் தேசிய சூரிய சக்தி கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் தூய்மையான எரிசக்தி சங்கத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய மற்றும் வியட்நாம் சூரிய சக்தி தொழில்களுக்கிடையே அறிவுசார் தகவல்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்ளுதலை ஊக்குவித்தல், இந்தியா மற்றும் வியட்நாமில் சூரிய சக்தியை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிதல்
|
திரு பிரணவ் ஆர் மேத்தா, தலைவர்
|
திரு டாவோ டு டுவோங்க், தலைவர்
|