சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தெலங்கானாவில் ரூ.13,000 கோடி மதிப்பில் 14 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தொடக்கம்
Posted On:
21 DEC 2020 3:00PM by PIB Chennai
தெலங்கானாவில் ரூ.13,000 கோடி மதிப்பில் 14 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 765.663 கி.மீ தூரத்துக்கு ரூ.13,169 கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டி, டாக்டர் வி.கே.சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு நிதின்கட்கரி பேசியதாவது:
தெலங்கானாவில் கடந்த 6 ஆண்டுகளில், மொத்தம் 59 சாலை திட்டங்கள், 1918 கி.மீ தூரத்துக்கு, ரூ.17,617 கோடி செலவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டன. தெலங்கானாவில் உள்ள 33 மாவட்டங்களும், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-15ம் ஆண்டிலிருந்து 841 கி.மீ சாலைகள் ரூ.4793 கோடி மதிப்பில் முடிவடைந்துள்ளன. 809 கி.மீ தூரத்துக்கு, ரூ.13,012 கோடிக்கு சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், 13 முக்கிய சாலை திட்டங்கள் ரூ.8,957 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
பிரதமரின் தொலை நோக்கான புதிய இந்தியாவுக்கு, உலகத் தரத்திலான சாலை கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682369
*******
(Release ID: 1682369)
(Release ID: 1682396)
Visitor Counter : 178