தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2020 அக்டோபர் மாதத்தில் 11.55 லட்சம் சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 DEC 2020 6:37PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) கடந்த அக்டோபர் மாதத்தில் 11.55 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

இபிஎப்ஓ-இன் தற்காலிக ஊதியத் தரவு விவரம் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் 11.55 இலட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கோவிட்-19 தொற்று ஏற்பட்ட போதிலும், நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை)  39.33 இலட்சம் சந்தாதாரர்கள் இபிஎப்ஓ-இல் இணைந்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 7.39 இலட்சம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இந்தாண்டு அக்போடரில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது கோவிட்-19க்குப் பின்பு, மீட்பு நடவடிக்கை வேகமாக இருப்பதைக் காட்டுகிறது.

கடந்த அக்டோபரில், 7.15 இலட்சம் புதிய சந்ததாரர்கள் இபிஎப்-இல் இணைந்துள்ளனர். தோரயமாக 2.40 இலட்சம் உறுப்பினர்கள் கடந்த அக்டோபரில் வெளியேறியுள்ளனர். 6.80 இலட்சம் உறுப்பினர்கள் வெளியேறி மீண்டும் இணைந்துள்ளனர். இது சந்தாதாரர்கள் தங்கள் நிறுவனத்துக்குள்ளேயே மாறியிருப்பதைக் காட்டுகிறது. வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் இணைவது, இந்தியாவில் கோவிட் பாதிப்பு குறைந்த பின், தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதையும் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682231

------


(வெளியீட்டு அடையாள எண்: 1682266) வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Telugu