பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கொல்கத்தா மற்றும் குவாலியரில் 2 டிரைப்ஸ் இந்தியா விற்பனையகங்களை திரு அர்ஜுன் முண்டா திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 19 DEC 2020 7:36PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா, கொல்கத்தா மற்றும் குவாலியரில் தலா ஒரு டிரைப்ஸ் இந்தியா விற்பனையகத்தை இன்று திறந்து வைத்தார்

கொல்கத்தா விற்பனையகத்தை நேரிலும், குவாலியர் கடையை காணொலி மூலமும் திரு அர்ஜுன் முண்டா திறந்து வைத்தார். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள டிரைப்ஸ் இந்தியா விற்பனையகங்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி. ரேணுகா சிங், இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைஃபெட்) தலைவர் திரு. ரமேஷ் சந்த் மீனா, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர் திரு தீபக் காண்டேகர், டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா உள்ளிட்டோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

 

பழங்குடியினரின் வாழ்வை மாற்றியமைக்கவும், அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. பழங்குடியினர் தயாரிக்கும் பல்வேறு பொருள்கள் 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிகத் தளமான tribesindia.com-லும், இதர மின் வணிகத் தளங்களிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682029

**********************


(रिलीज़ आईडी: 1682050) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Telugu