சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ரூபாய் 11,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை திரு. நிதின் கட்கரி கர்நாடகாவில் துவக்கி வைத்தார்

Posted On: 19 DEC 2020 3:44PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி, கர்நாடகாவில் 1200 கிலோ மீட்டர் நீளமுள்ள 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 11 ஆயிரம் கோடி ஆகும். விழாவில் பேசிய திரு கட்கரி, வரும் வருடங்களில் ரூபாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 144 கோடியை கர்நாடகாவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.

நாட்டில் அதிக அளவில் கரும்பை விளைவிக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அமைச்சர், எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

கடந்த ஆறு வருடங்களில் 900 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் கர்நாடகாவில் அதிகரிக்கப்பட்டது என்று கூறிய திரு,கட்கரி, கர்நாடகாவில் தற்போது 7652 கிலோமீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாகக் கூறினர்.

கர்நாடக முதல்வர் திரு எடியூரப்பா, முன்னாள் பிரதமர் திரு.எச்.டி. தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் திரு.பிரகலாத் ஜோஷி, திரு. சதானந்த கவுடா மற்றும் ஜெனரல் டாக்டர். வி. கே. சிங், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681965

**********************


(Release ID: 1681996) Visitor Counter : 170