குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வடகிழக்குப் பகுதியின் அபரிமிதமான சுற்றுலாத் திறனைப் பயன்படுத்த குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 18 DEC 2020 5:57PM by PIB Chennai

வடகிழக்குப் பகுதியின் அபரிமிதமான சுற்றுலாத் திறனைப் பயன்படுத்த வேண்டும் என  குடியரசுத் துணைத் தலைவர்  திரு வெங்கையா நாடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிசோரம் ஆளுநர் திரு. ஸ்ரீதரன் பிள்ளை எழுதிய, ‘ஓ மிசோரம்என்ற  ஆங்கிலக் கவிதைத் தொகுப்புப் புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அபரிமிதமான சுற்றுலாத் திறனை மக்கள் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்தப் பகுதியில் விமானப் போக்குவரத்து அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வடகிழக்கு மாநிலங்கள் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்.

நம் நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்  26 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் பலர், கொரோனாவுக்கு பின் உள்நாட்டுச் சுற்றுலாவை விரும்பலாம். அதனால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.  அதனால் வடகிழக்குப் பகுதிக்கு பயணம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். 

மிசோரம் மாநிலத்தின் வண்ணமயமான திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் தனிச்சிறப்பானவை.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர்  திரு.வெங்கையா நாடு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681756

**********************



(Release ID: 1681817) Visitor Counter : 207