பாதுகாப்பு அமைச்சகம்

ரூ. 28,000 கோடி மதிப்பில் ராணுவ ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை

Posted On: 17 DEC 2020 5:25PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில் ரூ. 28,000 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை 2020-இன் கீழ் நடைபெற்ற முதல் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில் இந்திய தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அரசின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மொத்தமுள்ள ரூ. 28 ஆயிரம் கோடியில் ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய தொழில் துறையிடமிருந்து பெறப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681456

**********************(Release ID: 1681573) Visitor Counter : 212