உள்துறை அமைச்சகம்

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மோடி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 16 DEC 2020 7:23PM by PIB Chennai

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 3500 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்து மற்றுமொரு முக்கிய முடிவொன்றை மோடி அரசு இன்று எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவு ஒன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் இந்த முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681216

**********************


(रिलीज़ आईडी: 1681276) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu