உள்துறை அமைச்சகம்

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 13 DEC 2020 2:42PM by PIB Chennai

கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தாக்குதலில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து நாடாளுமன்றத்தைப் பாதுகாத்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நாடாளுமன்ற தாக்குதலின் 19-வது ஆண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஜனநாயகத்தின் வழிபாட்டுத் தலமான நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்தியத் தாயின் வீர திருமகன்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். உங்களது தியாகத்திற்கு இந்த தேசம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும். பிறருக்கு முன்மாதிரியான அவர்களது வீரம் மற்றும் தியாகத்தை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680371

**********************


(रिलीज़ आईडी: 1680391) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Bengali , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati