சுற்றுலா அமைச்சகம்

"இந்தியாவில் பறவை வளர்ப்பு" என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

Posted On: 12 DEC 2020 8:09PM by PIB Chennai

நமது நாட்டை பாருங்கள் வரிசையின் கீழ் தொடர் இணைய கருத்தரங்குகளை நடத்தி வரும் மத்திய சுற்றுலா அமைச்சகம், "இந்தியாவில் பறவை வளர்ப்பு" என்னும் தலைப்பிலான இணைய கருத்தரங்கை இன்று (2020 டிசம்பர் 12) நடத்தியது.

இந்தியாவில் பறவைகள் மற்றும் பறவை வளர்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து இந்த இணைய கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

உலகில் மிகவும் வளமான பல்லுயிர்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இமயமலை, பாலைவனம், கடற்கரை, மழைக்காடுகள், தீவுகள் என இயற்கை வளம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

மேற்கண்ட இடங்களில் பல வகையான பறவைகள் வாழ்கின்றன. இவற்றை குறித்து இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு புகைப்படக்காரரும், திரைப்பட இயக்குநருமான திரு சௌரப் சாவந்த் இணைய கருத்தரங்கில் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680281

                                     -----


(Release ID: 1680304) Visitor Counter : 146