ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே வாரிய தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் : ஏற்பாடுகள் தீவிரம்

प्रविष्टि तिथि: 11 DEC 2020 5:25PM by PIB Chennai

இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும்  மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல்  3 கட்டங்களாக நடக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் பல பிரிவுகளில்  1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். இந்தத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. 

முதல் கட்டத் தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட ஆட்கள் தேர்வு டிசம்பர் 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரை நடக்கிறது. 3ம் கட்ட தேர்வு 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் வரை நடக்கிறது.

இது குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக இ-மெயில், எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையளத்திலும் வெளியிடப்பட்டுள்ள.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680018

************


(रिलीज़ आईडी: 1680057) आगंतुक पटल : 435
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , English , Manipuri