பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல் : துரிதப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

Posted On: 11 DEC 2020 5:15PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானை சந்தித்த மத்திய பழங்குடியினர்  நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தார்.

 

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் (டிரைஃபெட்) நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

 

மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்பு, பழங்குடியினரின் வாழ்வையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, அரசுத் துறைகளுடனும், ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடனும் கைகோர்த்து, பழங்குடியினருக்கு அதிகாரமளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது.

 

அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு அர்ஜுன் முண்டாவுக்கிடையேயான சந்திப்பின் போது, தொழில்முனைதல் திட்டங்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்தும், இதர நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680016

*****************(Release ID: 1680038) Visitor Counter : 125