வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவும் ஸ்வீடனும் அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும்: திரு பியுஷ் கோயல்

Posted On: 11 DEC 2020 4:31PM by PIB Chennai

இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றிணைந்து அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர்   திரு பியுஷ் கோயல்  கூறினார்.

இந்தியா-ஸ்வீடன் வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு (சிஇஓ) கூட்டத்தில்மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர்   திரு பியுஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

2020ம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டு. இந்த நெருக்கடியை நாம் வாய்ப்பாக மாற்ற வேண்டும்.  இந்தியப் பொருளாதாரத்தை விரிவாக்கவும், வளமடையச் செய்யவும், நவீன 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் இந்தியாவை மாற்றும் எங்கள் முயற்சியில் ஸ்வீடன் பங்குபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகள் இடையேயான நட்பை விரிவுபடுத்த ஸ்வீடன்-இந்திய சிஇஓ கூட்டமைப்பு உதவும் என நம்புகிறேன். 1.35 பில்லியன் மக்கள் தொகையுடன், இந்தியா உலகின் சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்குகிறது.

சிறப்பான வாழ்க்கையை விரும்பும் நடுத்தர வர்த்தகத்தினர் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. அதனால் ஸ்வீடன் நிறுவனங்கள், இந்தியாவில் பணியாற்றுவதையும், சிறந்த வாய்ப்புகளைத் தேடுவதையும் விரும்பும். தொழில்நுட்பத்தின் மீதான எங்கள் புதுப்பிக்கப்பட்ட கவனம் இந்தியாவின் முன்னுரிமைகளை மீண்டும் சீரமைக்க உதவும். புத்தாக்கத்திலும், வளர்ச்சியிலும், ஸ்வீடன் முக்கிய பங்காற்றும். அதிக தொழில்நுட்பம் வாய்ந்த பொருட்கள், திறமைகள், சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வருவதை நாங்கள்  ஊக்குவிக்கிறோம்.  புதுமையிலும், பல துறைகளில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவதிலும்  ஸ்வீடன் உலகின் முன்னணி நாடாக உள்ளது. ஸ்வீடனுடன் இணைந்து பணியாற்றுவதால், இந்தியா  மிகுந்த பயனடையும்.

இவ்வாறு அமைச்சர்   திரு பியுஷ் கோயல்  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680006

*******************



(Release ID: 1680032) Visitor Counter : 181