சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நீட்டிப்பு

Posted On: 10 DEC 2020 2:14PM by PIB Chennai

ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

புறப்படும் இடங்களைச் சார்ந்து ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் மதிப்பிடப்பட்டுள்ள செலவும் குறைக்கப்பட்டுள்ளது. மும்பை ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நக்வி இந்த தகவல்களை அளித்தார்.

இன்று, அதாவது 2020 டிசம்பர் 10, தான்  விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது இது 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021-க்காக பெறப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

இப்பிரிவில், 2020-ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021-க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679640

******


(Release ID: 1679740) Visitor Counter : 259